பார்வையாளர்கள் எண்ணிக்கை

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Search This Blog

Monday, March 3, 2025

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் 03/03/2025 முதல் ஊர் மன்ற வளாகத்தில்

 வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வுகள் இன்று 03/03/2025 தொடங்கியுள்ள நிலையில், வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை நேரத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுடைய படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக, தலைமை ஆசிரியர் திருமதி அ. மணிமேகலை அவர்களுடைய சீரிய முயற்சியால் ரெட்டியபட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை நேரம் முழுவதும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.




Sunday, March 2, 2025

இளம் கவிஞர் விருது மாநில அளவிலான கவிதைப் போட்டி 28.2.2025


 மாநில அளவிலான இளம் கவிஞர் விருதுக்கான  கவிதைப் போட்டி 28. 2..2025 அன்று இணைய வழியில் நடைபெற்றது. நம் வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர் மு ராகுல் பிரசன்னா பங்கேற்ற நிகழ்வு