வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா
நமது வத்திபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரத்தினக்குமார் தலைமையில் நடந்த கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் சிறப்புரையாற்றினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், மாவட்ட பொருளாளர் விஜயன், திமுக ஒன்றிய செயலாளர்கள் சேக்சிக்கந்தர்பாட்சா, பழனிச்சாமி, தர்மராஜன்,மோகன், வெள்ளிமலை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.











No comments:
Post a Comment