எமது வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 09/01/2025 வியாழக்கிழமை தமிழ்க்கூடல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நல்லாசிரியர் திருமதி. இராதிகா மற்றும் சீர்மிகு ஆசிரியர் திருமதி அனிதா அவர்கள் கலந்து கொண்டு இலக்கிய உரையாற்றினார்கள். கலந்துரையாடல் மேடை, இலக்கியச் சொற்பொழிவு, மாணவர்களுக்கான வினாடி வினா, பரிசளிப்பு என மிகச் சிறப்பாக விழா நடந்தேறியது. பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி அ.மணிமேகலை அம்மா அவர்களுக்கும், எமது தமிழ்த் துறைச் சொந்தங்கள் திருமதி பிரேமா, திருமதி அமுதா, திரு விக்னேஸ்வரன் ஐயா ஆகியோருக்கும், விழாவிற்கு ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நல்கிய கணிதப் பட்டதாரி ஆசிரியர் திரு. க. ராமன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்
No comments:
Post a Comment