https://forms.gle/Je5XpDqareAVYgwZ8
அன்புடையீர் வணக்கம்.
2022-2023ஆம் கல்வியாண்டு நவம்பர் மாதம் 14ஆம் நாள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு,
திண்டுக்கல் மாவட்டம், வத்திப்பட்டி, அரசு மேனிலைப் பள்ளித் தமிழிலக்கிய மன்றத்தின்
சார்பில் இணையவழியிலான இயங்கலைத் திறனறிவுத் தேர்வு 14-11-2022 முதல் 21 -11-2022 வரை
நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்துவகைப்
பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ளலாம். மேற்கண்டுள்ள இணைப்பினைத் தொடுவதன் மூலமாகத் தேர்வில்
பங்கேற்கலாம். தேர்வில் பங்கேற்போர் உரிய இடத்தில் சரியான மின்னஞ்சல் முகவரியைப் பதிவு
செய்யவும். மாணவர்கள் ஆசிரியர்களின் நெறிக்காட்டுதலுடன் அவர்களது மின்னஞ்சலில் தேர்வை
எழுதலாம். 35 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெறுவோர் பதிவு செய்த மின்னஞ்சலில் மின்
சான்றிதழ் (E-CERTIFICATE) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். திறனறிவுத் தேர்வுக்கான இணைப்பு: https://forms.gle/Je5XpDqareAVYgwZ8
குழந்தைகள் தின
வாழ்த்துகளுடன், திரு.ஞா.அமல்ராஜ், தலைமையாசிரியர், அரசு மேனிலைப் பள்ளி, வத்திப்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம். போட்டி ஒருங்கிணைப்பாளர்:
திரு.கொ.சுப.கோபிநாத், பட்டதாரி ஆசிரியர் (தமிழ்), அரசு மேனிலைப் பள்ளி, வத்திப்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம்.
No comments:
Post a Comment