பார்வையாளர்கள் எண்ணிக்கை

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Search This Blog

Friday, January 6, 2023

NPR கல்விக் குழுமம் - AURA 2022 - போட்டிகளும் சாதனைகளும்

 நத்தம் NPR கல்விக் குழுமம் AURA 2022 பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளை 06/01/2023 அன்று நடத்தியது. இதில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.   வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். அவற்றில் கட்டுரைப் போட்டி ஓவிய போட்டி ஆகியவற்றில் முதல் பரிசு பெற்றனர்.  மாணவி ஸ்ரீனிவர்சினி (9இ) கட்டுரைப் போட்டியிலும், மாணவன் ரத்னேஸ் (9ஆ) ஓவியப் போட்டியிலும் முதல் பரிசு பெற்றனர்.  ஓரிகாமி போட்டியில் மாணவிகள் ரபீக்கா, அழகு நாச்சி, அர்ச்சனா தேவி ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர். வெற்றியாளர்களுக்குப் பரிசு & சான்றிதழ்களை முதன்மைக் கல்வி அலுவலர் திரு அ. நாசருதீன் அவர்கள் வழங்கினார்.












No comments:

Post a Comment