பார்வையாளர்கள் எண்ணிக்கை

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Search This Blog

Friday, December 12, 2025

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா 12/12/2025

நமது வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி லிங்கம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நத்தம் பகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு ஆண்டி அம்பலம் , நத்தம் பகுதியில் கழகச் செயலர்கள் திரு சேக் சிக்கந்தர் பாட்ஷா, திரு ரத்தினகுமார், திரு பழனிச்சாமி, திரு ராஜ்மோகன், திரு விஜயன், ரெட்டியபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், நத்தம் ஒன்றியத்தின் பெரும் தலைவருமான திருமதி சாத்தி பவர் அவர்களும், நத்தம் மாவட்ட பொறுப்பாளர் திரு முத்துக்குமாரசாமி அவர்களும், அத்திப்பட்டியின் உதயகுமார், நத்தம் புதுக்கோட்டையின் பெருமாள் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்துரை ஆற்றினர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திருமதி ஜெயலட்சுமி அவர்கள் நன்றி உரையாற்றினார். பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு கோபிநாத் அவர்கள் தொகுப்புரை வழங்கினார்.