பார்வையாளர்கள் எண்ணிக்கை

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Search This Blog

Monday, June 2, 2025

தலைமை ஆசிரியரின் பணி நிறைவு பாராட்டு விழா 31/5/2025 நிகழ்வுகள்












 





















தலைமையாசிரியரின் நன்றி மடல்: 
அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மேலும் நம் பள்ளியில் பணியாற்றும் அனைவருக்கும், எஸ் எம் சி உறுப்பினர்கள் அனைவருக்கும், மேலும் நம் ஊரில் இருந்து வந்திருக்கக்கூடிய பெரியோர்கள் அனைவருக்கும் எனது பணிவான காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பணி நிறைவு விழாவில் பங்கு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம் பள்ளி சார்பாக கொடுக்கப்பட்ட  அனைத்து பரிசு பொருட்களும் மிக சிறப்பாக இருந்தன.  நம் பள்ளியின் சார்பாக வாங்கி கொடுத்த பரிசு பொருட்களுக்காக அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் என் விரலுக்கு மோதிரம் அணிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனக்கு சந்தன மாலை கொடுத்து, ஷால் அணிவித்து, சேலை வாங்கிக் கொடுத்து, இனிப்பு வழங்கிய நம் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாழ்த்து கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவினை தொகுத்து வழங்கிய நமது பள்ளித் தமிழ் ஆசிரியர் திரு. கோபிநாத் அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  நம் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அவர்கள் கொடுத்த வாழ்த்து மடலுக்கும், கோல்டன் சாய்பாபா படத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் விரும்பும் கடவுள் சாய்பாபா வெங்கலச் சிலையை வழங்கிய கணித ஆசிரியர் திரு. ராமன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பரிசு வழங்கிய இன்னாள் முன்னாள் எஸ் எம் சி தலைவிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேலை வழங்கிய சத்துணவு பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான முறையில் இந்த விழாவினை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற கல்வி ஆண்டு அனைவருக்கும் சிறப்பான முறையில் அமைய வேண்டும் என்றும் 100% தேர்ச்சியை நீங்கள் பெறவேண்டும் என்றும் வாழ்த்துக்களை கூறி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.