அரசு மேனிலைப் பள்ளி, வத்திப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் - 624401.
நிஜத்தின் நிழலைக் காட்டும் கல்விச் சாளரம்.கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!! வத்திப்பட்டியை வளப்படுத்துவோம்!!!
பார்வையாளர்கள் எண்ணிக்கை
Search This Blog
Thursday, June 5, 2025
Monday, June 2, 2025
தலைமை ஆசிரியரின் பணி நிறைவு பாராட்டு விழா 31/5/2025 நிகழ்வுகள்

தலைமையாசிரியரின் நன்றி மடல்:
அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மேலும் நம் பள்ளியில் பணியாற்றும் அனைவருக்கும், எஸ் எம் சி உறுப்பினர்கள் அனைவருக்கும், மேலும் நம் ஊரில் இருந்து வந்திருக்கக்கூடிய பெரியோர்கள் அனைவருக்கும் எனது பணிவான காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பணி நிறைவு விழாவில் பங்கு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம் பள்ளி சார்பாக கொடுக்கப்பட்ட அனைத்து பரிசு பொருட்களும் மிக சிறப்பாக இருந்தன. நம் பள்ளியின் சார்பாக வாங்கி கொடுத்த பரிசு பொருட்களுக்காக அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் என் விரலுக்கு மோதிரம் அணிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனக்கு சந்தன மாலை கொடுத்து, ஷால் அணிவித்து, சேலை வாங்கிக் கொடுத்து, இனிப்பு வழங்கிய நம் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாழ்த்து கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவினை தொகுத்து வழங்கிய நமது பள்ளித் தமிழ் ஆசிரியர் திரு. கோபிநாத் அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அவர்கள் கொடுத்த வாழ்த்து மடலுக்கும், கோல்டன் சாய்பாபா படத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் விரும்பும் கடவுள் சாய்பாபா வெங்கலச் சிலையை வழங்கிய கணித ஆசிரியர் திரு. ராமன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பரிசு வழங்கிய இன்னாள் முன்னாள் எஸ் எம் சி தலைவிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேலை வழங்கிய சத்துணவு பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான முறையில் இந்த விழாவினை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற கல்வி ஆண்டு அனைவருக்கும் சிறப்பான முறையில் அமைய வேண்டும் என்றும் 100% தேர்ச்சியை நீங்கள் பெறவேண்டும் என்றும் வாழ்த்துக்களை கூறி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
Tuesday, May 27, 2025
தலைமையாசிரியரின் பணி நிறைவு பாராட்டு விழா அழைப்பு
நம் பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெறவுள்ள தலைமையாசிரியர் திருமதி. அ.மணிமேகலை அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
Tuesday, March 11, 2025
5 வகுப்பறைகள் கட்டடப் பணி பூமி பூஜை நிகழ்ச்சி 12/03/2025
வத்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று12/03/2025 ஐந்து வகுப்பறைகள் கொண்ட கட்டடத்திற்கான பூமி பூஜை நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் வத்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு பவுர் அவர்களும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திரு. ரத்தினக் குமார் அவர்களும் வத்திப்பட்டி ஊராட்சி செயலர் திரு உதயா அவர்களும், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு அயூப் கான் அவர்களும் பங்கேற்க பள்ளியின் அனைத்து ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர்.




Subscribe to:
Posts (Atom)
-
எமது வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 09/01/2025 வியாழக்கிழமை தமிழ்க்கூடல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நல்லாசிரியர் திருமதி....